Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
க.சே.ரமணி பிரபா தேவி July 28, 2026 02:14 PM

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தலைமை தாங்கும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 28) ஆளுநர் அர்லேகர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

நம் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நிலையில், அவரின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.



© Copyright @2026 LIDEA. All Rights Reserved.