ஹாலிவுட்டில் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள புதிய படம் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day). இப்படம் இன்று (ஜூலை 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது.
இதில் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். டாம் ஹாலண்டுக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி ஜெண்டயா நடித்துள்ளார்.
மேலும், மார்க் ரஃபலோ, ஜேக்கப் படலோன், சேடி சிங்க், ஜான் பெர்ன்தால், டிராமெல் டில்மேன், மைக்கேல் மாண்டோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பிரபல இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார்.
தற்போது, இப்படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்கள் சிலர் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.