தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்தது. அதிலும் இந்தாண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது. இதனையடுத்து அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து அடுத்த சில மாதங்கள் ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. தற்போது போர் பதற்றம் சற்று குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியுள்ளதால் தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து உயரந்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 85 ரூபாய் குறைந்து 14,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,13,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையானது இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.