கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டோரோதி. சனந்த் ரெட்டி , ரிஷிகாந்த் , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டோரோதி படத்தின் முதல் பாடலான கல்யாண விருந்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. இந்த பாடலை இளையராஜாவே எழுதியுள்ளார். யுகேந்திரன், அந்தோணி தாசன், பிரியா ஜெர்சன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளார்கள். கல்யாண விருந்து முழு பாடல்வரிகள் இதோ
கல்யாண விருந்து...
நீ அடிச்சு நொறுக்கு....
கல்யாண விருந்து
நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு..(1)
கல்யாண விருந்து
நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு (2)
சமைச்சதெல்லாம் எலைக்கு வரும் தங்கராசு
அங்க நிறையும் எச்சில் இலை தொட்டிலு
பொண்ணு நெனப்பா
மல்லி மல்லிகப்பூ கட்டிலு
காதலிச்சவன் கையப்புடிச்சவன் பொறுத்தமாக இருக்கனும்
கையப்புடிச்சவன் கட்டிலில் போறவன் ஒருத்தனாக இருக்கனும்
கல்யான விருந்து.....
வா அடிச்சு நொறுக்கு...
யாராருக்காகவோ மாமோய் நீ பெத்தியே
உன் மகள அந்த ராசாத்திய
யார் யாரோ அவள
காதலிக்க நெனச்சா
தொலைஞ்சா அந்த படுபாவியே
ஏமாந்த குழுவினரில் நானும் ஒருத்தன்
ஆசையோடு அருமையாக அவள வெறுத்தேன்
ஏமாந்த குழுவினரில் இவனும் ஒருத்தன்
ஆசையோடு அருமையாக அவள வெறுப்பேன்
லவ்வுல சிக்கும் பசங்களே
இங்க வாங்கடா வாங்க
மாஸ்டர் க்ளாஸூ எடுப்பேன்
கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு
கல்யாண விருந்து
வா அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு..(1)
கல்யாண விருந்து
நீ அடிச்சு நொறுக்கு
பந்தியில முந்திக்கடா முத்துராசு (2)
காதலிச்சவன் கையப்புடிச்சவன் பொறுத்தமாக இருக்கனும்
கையப்புடிச்சவன் கட்டிலில் போறவன் ஒருத்தனாக இருக்கனும்
காதலிச்சவன் கையப்புடிச்சவன் பொறுத்தமாக இருக்கனும்
கையப்புடிச்சவன் கட்டிலில் போறவன் ஒருத்தனாக இருக்கனும்
ஏலேய் என் காதலா
நீ என்ன கோழையா
பந்தலா போட இங்க வந்த
உன் காதல் காதலா
என்னோட மோதலா
என்னையா பழி வாங்கவந்த
பொண்ணுங்க நிலை உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில் ஏறாது
பாத்தியா இந்த வாத்தியா
பாத்தியா இந்த வாத்தியா
சேதி கேட்டியா இந்த கத மாறிப்போச்சு
கல்யாண விருந்து....
வா அடிச்சு நொறுக்கு....