தமிழகத்தில் தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், நேற்று இரவு சென்னையில் தவெக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என உதயநிதி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அடையாறு வண்ணத்துறை பகுதியில், தமிழக வெற்றிக்காக நிர்வாகியான கண்ணன் என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் ஓட ஓட வெற்றி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு அடையாறில் சிவா என்பவரை கண்ணன் தலைமையிலான கும்பல் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக சிவாவின் சகோதரர் மகன் தலைமையிலான கும்பல் கண்ணனை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.