போருக்கு காசு இல்லை..! ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன் - ரூ.236 கோடி நிதி திரட்ட இலக்கு
குலசேகரன் முனிரத்தினம் September 08, 2026 01:44 PM

Ukraine Russia War: ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் 25 மில்லியன் அதாவது 236 கோடி ரூபாய் நிதியை திரட்ட உக்ரைன் திட்டமிட்டுள்ளதாம்.

ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் திட்டம்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தி வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், போருக்கான நிதியை திரட்டுவதற்காக ஆபாசப்படங்களை சட்டப்பூர்வமாக உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறதாம். அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் யரோஸ்லாவ் தாக்கல் செய்த மசோதாவில், ஆபாச திரைப்பட தொழில்துறையை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 236 கோடி ரூபாயை வரி வருவாயாக ஈட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் நாடாளுமன்ற நிதிக்குழு தலைவர், புதிய சட்டத்தால் திரட்டப்படும் நிதியால் வாருக்கு தேவையான 30 ஆயிரம் ட்ரோன்களை வாங்க முடியும் என தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் சட்ட விதிகள் என்ன?

தற்போதைய சூழலில் உக்ரைனில் ஆபாச படங்களை தயாரிப்பது, வீடியோ அடக்கங்களை கொண்டிருப்பது, சட்டவிரோதமானதாகும். இந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும். ஆனால் ஊழல் காவல்துறை அதிகாரிகளால் அந்நாட்டில் ஆபாச திரைப்பட துறையானது தொடர்ந்து விரிவடைந்து மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகள் சமீபத்தில் ஆபாச படங்களை உருவாக்குபவர்களிடமிருந்து வரிகளை வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், தங்கள் வருமானத்தை அறிவிக்கும் தயாரிப்பாளர்கள், உக்ரைனின் ஆபாசச் சட்டங்களின் கீழ் குற்றவாளிகாகா கருதப்படலாம். 

ஆபாச படங்கள் - கோடிகளில் புரளும் பணம்

ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு, ஆபாச படங்கள் விவகாரத்தை உக்ரைன் அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால்,  ஃபீனிக்ஸ் இன்டர்நேஷனலின் தரவுகளின் அடிப்படையில், 2023-ஆம் ஆண்டில் 7,900 உக்ரேனியர்கள் ஒன்லிஃபேன்ஸ் என்ற சேவையின் மூலம் 131 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர். இதையடுத்து அரசு மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்களிடமிருந்து வருவாய் வசூலிப்பதற்கான வரி அதிகாரிகளின் முயற்சிகள் ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளன. தங்கள் வருமானத்தை அறிவித்த சிலருக்கு, வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக ஆபாச உள்ளடக்கத்தைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டி சம்மன் வந்துள்ளனவாம். இதனால், தங்கள் வருமானத்தை அறிவித்து அதன் மூலம் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவதா அல்லது தலைமறைவாக இருப்பதா என்ற சந்தேகத்தி தயாரிப்பாளர்கள் சிக்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: NHAI: ட்ராஃபிக்கா? விபத்தா? தமிழ்நாட்டில் 1,188KM நெடுஞ்சாலைகளுக்கு அதிரடி ப்ளான் - எந்தெந்த பகுதிகளுக்கு ATMS

நிதி சிக்கலில் உக்ரைன்..!

உக்ரைனிற்கு ஆயுதங்களை வழங்கி வந்தாலும் நேரடி நிதியுதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் கடுமையான நிதி சிக்கலில் தவிக்கிறது. இந்நிலையில் ஆபாச பட தொழில்துறையை சட்டப்பூர்வமாக்குவது குறித்த முன்மொழிவை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் என்று ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.