ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு .? இன்றைய விலை இதோ..
கு. அஜ்மல்கான் September 08, 2026 12:44 PM
ஏறி இறங்கும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து 1,13,920 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 120 அதிகரித்து 14360 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,14,880 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 5- ம் தேதி கிராம் ஒன்றுக்கு கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 6-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
- ஆகஸ்ட் 7-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,130 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை
நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கும் 1,120 ரூபாய் உயர்ந்து 1.14.160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையானது இன்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.