Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
சுகுமாறன் September 06, 2026 11:44 PM

தமிழ் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவர் நடிகராக மட்டுமின்றி கார் பந்தய வீரராகவும் திகழ்கிறார். அஜித் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே கார் பந்தயங்களில் மிகவும் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார்.

கிளாடியேட்டர்ஸ்:

தற்போது தனக்கென்று சொந்தமாக ஒரு கார் பந்தய அணியை உருவாக்கி உலகின் பல நாடுகளில் நடக்கும் முன்னணி கார் பந்தயங்களில் அஜித்குமார் பங்கேற்று வருகிறார். வெறும் அணியாக மட்டும் பங்கேற்காமல் உலகின் தலைசிறந்த கார்பந்தய அணிகளுடன் மோதி வெற்றி பெற்று போடியத்திலும் இடம்பிடித்து அசத்தியது.

அஜித்குமாரின் கார் பந்தய அனுபவத்தை ஆவணப்படுத்தும் வகையில் கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. 

ரிலீசான ட்ரெயிலர்:

யூ டியூப்பில் வெளியாகாமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நேரடியாக திரையரங்கில் இந்த ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேரடியாக திரையரங்கில் வெளியானதால் இந்த கிளாடியேட்டர்ஸ் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த கிளாடியேட்டர்ஸ் ட்ரெயிலரில் அஜித் கார் பந்தயத்தில் ஈடுபடும் காட்சிகள், அஜித் பற்றி அவரது அணியினர் கூறும் காட்சிகள், அஜித்தின் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகையும், அவரது மனைவியுமான ஷாலினி, அவரது மகன் மற்றும் மகள் அஜித்தின் கார் பந்தய அனுபவம் பற்றி பேசியுள்ளனர். இதில் அஜித்தின் மனைவி அவரைப் பற்றி பேசும்போது தோல்வி குறித்து அவர் பயந்து நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டி பேசியிருப்பார். 

இந்த ட்ரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த ட்ரெயிலரையே அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர். அவரது படம் கடைசியாக குட் பேட் அக்லி வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருப்பதால் இந்த ஆவணப்படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் சொந்தமாக கார் ரேஸ் அணியை உருவாக்கிய பிறகு மிடில் ஈஸ்ட் ட்ராபி, மிடில் ஈஸ்ட் ட்ராபி, ஜிடி4 யூரோப்பியன் சீரிஸ், 24எச் சீரிஸ் என பல போட்டித் தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.