இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 8வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கி 2 நாள் நடக்கிறது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், மற்றும் இதர முக்கிய பிரிவினரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசுக்கான சம்பளம் உயர்வு, பென்ஷன் தொகை, ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். இக்கூட்டத்தில் மிகவும் முக்கிய பிரச்சனையாகவும், அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் பெறுவோருக்கு கிடைக்க கூடிய, கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை பென்ஷனாக கொடுக்கப்படும் வேளையில் இதை 67 சதவீதமாக அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கிய விவாதப்பொருளாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டம் என்பது 8வது சம்பள கமிஷன் ஆணையம் ஒவ்வொரு மாநிலம் நகரங்கள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மத்தியில் நடத்தும் கருத்து கேட்பு கூட்டமாகும்.
இதற்காக ரஞ்சா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு நாடு முழுவதும் கருத்து கேட்புக்காக பயணம் செய்து வருகிறது. இக்குழு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஜெய்பூர், சென்னை, புதுச்சேரி, சண்டிகர், பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்ய உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் போல 8வது சம்பள கமிஷனிலும் பிட்பெண்ட் ஃபேக்டர் அடிப்படையாக வைத்து பென்ஷன் தொகையை கணக்கிட்டால் ஒருவருக்கு அதிகப்படியாக எவ்வளவு பென்ஷன் தொகை வரும் என்றால்
மேலும் இவை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை, பிட்பெண்ட் ஃபேக்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது.