ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, ஓடிடி தளங்களிலும் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 7 முதல் 12-ம் தேதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல் இதோ.
இந்த வாரத்தின் தொடக்க நாளான செப்டம்பர் 7-ம் தேதி, ‘Untold: Raygun – Breaking Badly’ என்கிற ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
செப்டம்பர் 8-ம் தேதி ‘Fauda’ தொடரின் 5-வது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தத் தொடர் ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில் வெளியாகிறது.
செப்டம்பர் 9-ம் தேதி ஓடிடி ரசிகர்களுக்கு பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகின்றன. தெலுங்கில் உருவாகியுள்ள ‘Veerabhadruni Rahasyam’ தொடரின் முதல் சீசன் இரண்டாம் பகுதி ZEE5 தளத்தில் வெளியாகிறது.
மேலும், ‘Drawn Together’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் Prime Video தளத்தில் வெளியாகிறது. ‘Why Did I Get Married Again?’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
செப்டம்பர் 10-ம் தேதி ‘Chumbak’ என்ற இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதே நாளில் வெளியாகும் ‘The Paper’ தொடரின் இரண்டாவது சீசன் ஆங்கிலத்தில் JioHotstar தளத்தில் வெளியாகிறது.
செப்டம்பர் 11-ம் தேதி இந்த வாரத்தின் முக்கியமான OTT வெளியீடுகள் இடம்பெறுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் ‘மகுடம்’ திரைப்படம் பிரைம் விடியோ தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ‘பஞ்சனாமா’ திரைப்படம் ZEE5 தளத்திலும், ‘கோலோவெறி’ திரைப்படம் ETV Win தளத்திலும் வெளியாகின்றன.
மலையாளத்தில் ‘வரவு’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘பிரின்ஸ் ஆப் ,மாலிவுட்’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
மேலும், இந்தி மொழியில் ‘The Revolutionaries’ தொடர் பிரைம் வீடியோ தளத்திலும், ‘Ali Baba Aur 40 Bhoot’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘Hungry’ திரைப்படம் Lionsgate Play தளத்தில் வெளியாகிறது.
செப்டம்பர் 12-ம் தேதி இந்தி மொழியில் ‘Jungle Tales with Mowgli’ தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதனுடன் கொரிய மொழியில் வெளியாகும் ‘A Love Other Than Yours’ திரைப்படமும் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.