மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றம் செப்டம்பர் 18 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
உலக பிரசித்திப்பெற்ற மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வுகள் தேதிகள் திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செப் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக செப்டம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறுகின்றன. இதேபோல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், 10 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அட்டவணையை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும்
6,7,8ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ல் விருப்ப மொழி, 19ல் தமிழ், 21ல் கணக்கு, 22ல் உடற்கல்வி, 23ல் அறிவியல், 24ல் சமூக அறிவியல், 25ல் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும். இதேபோல் 9,10ம் வகுப்புகளுக்கு செப்.18ல் விருப்ப மொழி, 19ல் தமிழ், 21ல் கணக்கு, 22ல் உடற்கல்வி (9-ம் வகுப்பு), 23ல் அறிவியல், 24ல் சமூக அறிவியல், 25ல் ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் நடைபெறும். மேலும் 11, 12ம் வகுப்புகளுக்கு செப்.18ல் இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களும், 19ல் தமிழ், 21ல் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களும், 22ல் ஆங்கிலம் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி பாடங்களும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 23ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் உள்ளிட்ட பாடங்களும், 24ல் ஆங்கிலமும், 25ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களும் நடைபெறுகின்றன. 11ம் வகுப்புக்கு தேர்வு நேரம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 12-ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.