நடிகை நிவேதிதா சதீஷ் தனது நீண்ட நாள் காதலனான சுஹைப் முகமத் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இருவருக்கும் நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் நிவேதிதா திருமணம் செய்துகொள்ள விருக்கும் சுஹைப் முகமத் யார் என்பது குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது
நிவேதிதா சதீஷ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘ஹலோ’ படத்திலும் நடித்திருந்தார். பின்னர் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘சேத்துமாயிரம் பொன்’, ‘உடன்பிறப்பே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதிதா நடித்திருந்தார். மேலும் ‘மின்மினி’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது ‘ஓ பட்டர்ஃப்ளை’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
நிவேதிதா சதீஷின் வருங்கால கணவரான சுஹைப் முகமது ஒரு புகைப்படக் கலைஞர். நிவேதிதாவுடன் நீண்ட காலமாக உறவில் இருந்து வரும் அவர், சினிமா நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது புகைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். இருப்பினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான விரிவான தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக வெளியாகவில்லை.
நிவேதிதா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் சுஹைப் உடனான அவரது உறவு குறித்தும் ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினருக்கும் பெரியளவு தகவல் இல்லை. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நிவேதிதா சதீஷ் மற்றும் சுஹைப் முகமதுவின் திருமணம் குறித்த தேதி அல்லது திருமண ஏற்பாடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
View this post on Instagram