105 முகாம்கள்... 57,000 ஈழத் தமிழர்கள்: சட்டமன்றத்தை கவனிக்க வைத்த 'டாக்டர் ராமதாஸ் போன் கால்'! செளமியா அன்புமணி அதிரடி
சிவரஞ்சித் September 08, 2026 04:44 PM

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவை விரிவாக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்துப் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்

சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேச்சு:

இன்னும் சில நாட்கள் இந்த மானிய கோரிக்கை நிகழ்வுகள் நடத்தி இருக்கலாம். ஊழல் ஒழிப்புக்காக கூடுதல் ஆய்வாளர்கள் கண்காணிப்புக்காக நியமிக்கப்பட வேண்டும். சேவை உரிமை பெரும் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மின்சாரத் துறையில் ஊழல் ஒழித்தால் மின்சார கட்டணம் குறைய வேண்டும், பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் ஒழித்தால் பள்ளி கட்டணம் குறைய வேண்டும் அப்போதுதான் மக்களிடம் சென்று சேரும். பாராளுமன்றத்தை நேரலையில் பார்த்துள்ளோம் சட்டமன்றத்தை நேரலையில் பார்ப்பது மகிழ்ச்சி.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் தர்மபுரி மாவட்டத்தில் ப்ளோரைட் அதிகமாக தண்ணீரில் உள்ளது, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் குடிநீர் சுத்தப்படுத்தும் RO அமைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் சிறப்பு விதிவிலக்கு கொடுத்து எங்கள் மாவட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும், கிருஷ்ணகிரி விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த பிரச்சனை இருப்பதால் RO போட அனுமதி கொடுக்க வேண்டும். என் பேசினார்.

105 அகதிகள் முகாமில் 57,000 ஈழ தமிழர்கள் உள்ளார்கள் வீடு கட்டும் திட்டம் உள்ளது அதை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அய்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி என்னை சட்டமன்றத்தில் பேச சொன்னார்.

இலவச பேருந்து பயணம் தனியார் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். தனியார் பேருந்துகளை தான் கிராமங்களில் கொண்டு சென்று வருகிறார்கள். பொது போக்குவரத்து அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.