Aadhav Arjuna On EV Velu: முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான குற்றச்சாட்டுகளை உரிமை மீறல் விதியின் கீழ் விசாரிக்க, சபாநாயகரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
உரிமை மீறல் விதியின் கீழ் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான எ.வ. வேலு கடந்த 2021-26ம் ஆண்டு காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது 14.01.2026ம் தேதியிடப்பட்ட நாளில் வெளியிட்ட அரசாணை ஒன்றில் 2026-27ம் ஆண்டிற்கான CRIDP திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு 2000 கோடி ரூபாய்க்கு முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை2026-27 மொத்த திட்ட அனுமதிக்குள் பின்னர் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் 2026-27 மானியக்கோரிக்கைகள் பேரவையால் வாக்களிக்கப்படவோ, Approximate விதி நிறைவேற்றப்படவோ இல்லை.
இருப்பினும் அந்த பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலேயே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கால பட்ஜெட்டின் மீது 2000 கோடி ரூபாய் முன்கூட்டியே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி பொறுப்பு உருவாக்கப்பட்டுளது.
Minister Aadhav Arjuna brought a breach of privilege complaint against former Highways and Public Works Minister E.V. Velu, alleging that ₹2,000 crore was allocated for 80 projects without obtaining the approval of the Assembly. pic.twitter.com/5hRvdRGsxo
— Vignesh Theni (@Vignesh_twitz) September 8, 2026
இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது. சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒப்புதல் பெறாமலேயே எதிர்கால பட்ஜெட்டிலிருந்து 2000 கோடி ரூபாயை எடுத்துள்ளனர். அதாவது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என கருதி எதிர்கால பட்ஜெட்டிலிருந்து சட்டமன்ற அனுமதியே இல்லாமல் 2000 கோடி ரூபாயை எடுத்துள்ளனர்.
பேரவையின் முன் அனுமதி இன்றி பட்ஜெட்டை எதிர்பார்த்து பொறுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்ட உறுப்புகள் 2002 முதல் 2006 வரை மாநிலத்தின் செலவினங்களை பரிசீலித்து மானியம் வழங்கும் அதிகாரம் பேரவைக்கே அளிக்கப்படுகிறது. குறிப்பாக உறுப்பு 203-ன் கீழ் மானியத்தை ஏற்க, மறுக்க அல்லது குறைக்க பேரவைக்கு உள்ள அதிகாரம் ஒப்பந்த பொறுப்பை முன்கூட்டியே உருவாக்கியதால் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நிதி ஒதுக்கீடு பெறுவது முன்பே உருவாக்கப்பட்ட அங்கீகரமற்ற பொறுப்பை சட்டப்பூர்வமாக்காது. எனவே பேரவையின் நிதி மேலாதிக்கத்தையும், கண்ணியத்தையும் பாதிக்கும் இவ்விவகாரத்தை பேரவை விதி 225ன் கீழ் அவை உரிமைக்குழுவிற்கு ஆய்வு, விசாரணை மற்றும் அறிக்கை வழங்க அனுப்புமறு பணிவுடன் கோருகிறேன்” என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.