நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் சேயோன் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தாய்க்கிழவி. இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் சேயோன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பாக்யஸ்ரீ போஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பால சரவணனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மதுரை வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேயோன் திரைப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுதபூஜை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மாதம் பெரிய படம் வரவிருப்பதால் இந்த படம் பொங்கல் வெளியீடாக 2027ம் ஆண்டு ரிலீசாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்@Seeman4TN#சேயோன் #Seyon #VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @anbariv #BhagyashriBorse @RajbShettyOMK @RKFI @turmericmediaTM… pic.twitter.com/LPb7BVQR2y
— Raaj Kamal Films International (@RKFI) September 8, 2026
இந்த நிலையில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியினரின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீது மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. சீமான் நடிப்பது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்த சீமான், 2009ல் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினார். இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்தும் வருகிறார். நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சி, சட்டப்படி குற்றம், உச்சிதனை முகர்ந்தால், நாகராஜன் சோழம் எம்.ஏ., எம்.எல்.ஏ., டிராஃபிக் ராமசாமி, காட்டுப்பய சார் இந்த காளி, மிக மிக அவசரம், தவம், முந்திரிக்காடு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதேசமயம் ஜென்ஸி தலைமுறையினருக்கு நன்கு அறிமுகமான படமாக நடப்பாண்டு வெளியான “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” படம் அமைந்தது. இதில் அன்புக்கடல் வாசுதேவன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சேயோன் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முப்பாட்டன் முருகன் என மேடைக்கு மேடை உரக்க சொல்லி வரும் சீமான் சேயோன் படத்தில் நடிப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.