தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக திமுக தோல்வியை தழுவியது. அதிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட வி.எஸ். பாபு, மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மூச்சு விட திணறிய நிலையில் உறவினர்கள் அவசர அவசரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுதுத அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவிற்கு தொடர்ந்து சிகிச்சையானது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை மூலம் வி.எஸ்.பாபு உடல் நிலை முன்னேற்றம் அனைந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டார தகவலாக உள்ளது.