கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் நகரில் உள்ள மகாவீர் ஜெயின் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதாரண தகராறு, பெண் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமாக மாறியுள்ளது. சக மாணவர் தாக்கியதில் மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்லூரி வகுப்பறையில் மாணவர்கள் நாற்காலியை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பாக முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின்போது, பெண் மாணவியை சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் மேலும் அதிகரித்துள்ளது.
ஒரு கட்டத்தில் சில மாணவர்கள் அந்த பெண் மாணவியை நோக்கி சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களில் ஒருவரை மாணவி அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், அந்த பெண் மாணவியை தாக்கியுள்ளார்.
சிசிடிவி காட்சியில் மாணவர் மாணவியை தாக்குவதும், தாக்குதலுக்குப் பிறகு அவர் நிலைதடுமாறி கீழே விழுவதும் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்தில் மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காயமடைந்த மாணவி கேஜிஎஃப் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராபர்ட்சன்பேட் போலீசார் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாற்காலியை நகர்த்துவது தொடர்பாக தொடங்கிய வாக்குவாதம் எவ்வாறு தாக்குதல் வரை சென்றது, சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களின் பங்கு என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்சிகள் பதிவு😡
— ʝєяяу♡ (@preeti177) September 10, 2026
Ennadaa neega padikka pona idathil
Ippadi thaan seivathaa neenga 😡#Karnataka | #College | #Students | #Cctv | 😡😡😡😡😡😡 pic.twitter.com/hDwmPJKecU