இன்று மண்டாடி மற்றும் சர்தார் 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மண்டாடி படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சூர்யாவின் கடந்த கால பதிவு ஒன்றுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே மோதல் வெடித்துள்ளது
சூரி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்ததை குறிப்பிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் “Good content always wins big!” என குறிப்பிட்டுள்ளார்.
Great reports for #Mandaadi 💥💥🔥🔥👏👏👍👍@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success 🤗❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2026
சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சூர்யாவுடன் ரசிகர்கள் தொடர்புபடுத்துவதற்கு முக்கிய காரணம் 2022ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் பழைய X பதிவு. தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருவதுதான். அந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானன. அப்போது சூர்யா, சர்தார் படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில், நல்ல கதை மற்றும் சிறப்பான உள்ளடக்கம் பெரிய வெற்றியை பெறும் என குறிப்பிட்டு, சர்தார் படக்குழுவுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனும் சூர்யாவின் படத்துக்கு கிட்டத்தட்ட அதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் “Good content always wins big” என பதிவிட்டிருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதனால், அப்போது சூர்யா கார்த்தியின் சர்தார் படத்தை பாராட்டியது போல, தற்போது சிவகார்த்திகேயன் சூர்யாவின் மண்டாடி படத்தை பாராட்டியிருக்கிறாரா? என்ற விவாதம் உருவாகியுள்ளது. சிலர் இதை பழைய பதிவுக்கான பதிலாகவும், இன்னும் சிலர் இரு நடிகர்களுக்கும் இடையிலான இயல்பான நட்பாகவும் பார்க்கின்றனர்.