ப்ரோமோ பாடலாக வெளியாகி உள்ள இந்த வாடா வா பாடலில், யோகி பாபு அசத்தலாக நடனம் ஆடியுள்ளார். ஆரம்பத்திலேயே 'நைனா நான் சொல்லிட்டேன். நம்ப என்ன டான்சரா... கை, காலை மட்டும் ஆட்டுனா போதும் என யோகி பாபு, கூறிய பின்னர் தான் இந்த பாடலே துவங்குகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைக்க ஒரு போட்டில் ஏறி வேறு ஒரு ஊருக்கு தப்பிக்க நினைக்கின்றனர் சிலர். ஆனால் போட்டில் திடீர் என ஓட்டை விழா, போட் மூழ்காமல் இருக்க ஒருவர் நடுக்கடலில் குதிக்க வேண்டும் என கூறும் போது... என்ன நடக்கிறது என்பதை எதிர்பாராத திருப்புமுனையுடன் இயக்குனர் கூறி உள்ளார்.
சிம்பு தேவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பிரபா பிரேம்குமார் மற்றும் சி கலைவாணி ஆகியோர் தயாரித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். வாடா வா பாடலை கோல்ட் தேவராஜ் என்பவர் பாட, வாமனா என்பவர் லிரிக்கல் எழுதியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.