மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரி குறைப்புகளும் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று தான் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பு. 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதன் இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். இதனால் நேற்று தங்கத்தின் விலை மளமளவென குறைந்தது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் குறைந்தது குறித்து தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சல்லானி நம்முடைய ஏசியாநெட் தமிழ் சேனலுக்கு எக்ஸ்குளூசிவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது பற்றியும், இது நல்லதா? தங்கம் வாங்க இது சரியான நேரமா என்பது பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்களை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.