கடந்த ஜூலை 25, 2024 அன்று வெளியிட்ட அறிக்கையில் Suzuki Access 125, Burgman 125 மற்றும் Avenis 125 ஆகிய வண்டிகளின் பெரிய அளவிலான யூனிட்டுகளை சுஸுகி நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 30 மற்றும் டிசம்பர் 3, 2022க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை அது இப்பொது திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
வண்டியின் இக்னிஷன் காயிலில் பொருத்தப்பட்ட High-Tension Cordல் குளறுபடி உள்ளதை அந்நிறுவனம் இப்பொது கண்டறிந்துள்ளது. குறிப்பிட்ட வரைபடத்தோடு அந்த High-Tension Cordகள் ஒத்துப்போகவில்லை என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வண்டி இயங்கும் அது அதிக அளவில் தேய்மானம் அடைந்து ஒரு கட்டத்தில் அறுந்துவிடும் நிலை ஏற்படுகிறது.
இதனால் இன்ஜின் பழுதடை அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் உயர் அழுத்த தண்ணீரில் அது படும்போது, வாகனத்தின் ஸ்பீட் சென்சார் மற்றும் த்ரோட்டில் பொசிஷன் சென்சார் போன்ற உபகரணங்கள் சேதமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்திய அளவில் சுமார் 4 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
Suzuki Access 2,63,788 யூனிட்கள், சுசூகி அவெனிஸின் 52,578 யூனிட்கள் மற்றும் 72,025 பர்க்மேன் 125 யூனிட்களில் இந்த பாதிப்பு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் தங்கள் அருகிலுள்ள சேவை மையத்தைப் பார்வையிட்டு அந்த பகுதியை மாற்றிக்கொள்ளுமாறு அது கூறியுள்ளது.
மேலும் மே 5, 2023 மற்றும் ஏப்ரல் 23, 2024க்கு இடையில் தயாரிக்கப்பட்ட V-Strom 800DE வாகனங்கள் சிலவற்றையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளது சுசூகி. இந்தியாவில் 67 யூனிட்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுசுகி மதிப்பிட்டுள்ளது. அதில் வண்டியின் சக்கரத்தில் பழுதிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.