கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் வைகை புயல் வடிவேலு நடிப்பில் வெளியான "இம்சை அரசன் 23ம் புலிகேசி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் சிம்பு தேவன். பீரியட் பிலிம் என்று வரும் பொழுது தனக்கு நிகர் தானே என்று சொல்லும் அளவிற்கு சிம்பு தேவன் மிக நேர்த்தியான இயக்குனர்.
இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் வெளியாகும் அடுத்த திரைப்படம் தான் "போட் - நெய்தலின் கதை".
1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் பிரிட்டிஷார் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில், நடந்த பல உண்மை சம்பவங்களை கோர்வையாக கோர்த்து இந்த "போட்" திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கால் வாசிக்காட்சிகள் கடலில் தான் படமாக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியானது. அதனை தொடர்ந்து தற்பொழுது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.