மாடர்ன் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் தான் "ஸ்வீட் ஹார்ட்" இந்த திரைப்படத்தில் பல நடிகர் நடிக்க உள்ளார். "கனா காணும் காலங்கள்" என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகர் தான் ரியோ ராஜ். தொடர்ச்சியாக "சரவணன் மீனாட்சி", "ஜோடி நம்பர் ஒன்", "ரெடி ஸ்டெடி போ" உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்று வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான "சத்ரியன்" சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்த ரியோ ராஜ், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா", "பிளான் பண்ணி பண்ணனும்" மற்றும் "ஜோ" உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்து இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் உருவாகும் "ஸ்வீட் ஹார்ட்" என்கின்ற திரைப்படத்தில் ரியோ நாயகனாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளது சுகுமார். இந்த படம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.