தமிழ் திரையுலகத்திற்கு "இம்சை அரசன் 23ம் புலிகேசி", "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" மற்றும் "புலி" போன்ற முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட "பீரியட்" திரைப்படங்களை கொடுத்து அசத்தியவர் தான் இயக்குனர் சிம்பு தேவன். அதேபோல யார் மனதும் புண்படாதவாறு நையாண்டி செய்யும் வசனங்கள் நிறையவே சிம்பு தேவனின் திரைப்படங்களில் அமைய பெற்றிருக்கும்.
அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாம் உலகப்போரில் இருந்து தப்பிக்க கடலுக்குள் செல்லும் பல்வேறு குணாதிசயங்கள் உள்ள மனிதர்களுக்கு இடையே நடக்கும் விஷயத்தை, கடலின் நடுவில் வைத்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த போட்.
முழு வீச்சில் அந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து வருகிறது, இதற்கிடையில் அந்த திரைப்படம் உருவான விதம் குறித்து, அப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பேசியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.