சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி இரவு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 15க்கும் மேற்பட்டோர் பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது, திட்டமிட்ட படுகொலை என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிடமாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை பெருநகர் காவல்துறை புதிய கமிஷனராக கூடுதல் டிஜிபி அருண் நியமிக்கப்பட்டார்.
கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 104 காவல் நிலையங்களில் சரித்தரப்பதிவேடு குற்றவாளிகள் அனைவரின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.