'தங்கலான்' படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான மினுக்கி மினுக்கி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தங்கலான் வார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தன்னுடைய மயக்கும் இசையால், தங்கலான் படத்தில் தன்னுடைய மேஜிக்கை காட்டியுள்ளார் ஜிவி பிரகாஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் சூனியக்காரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.