தளபதி விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள... 'கோட்' படத்தின் 3-ஆவது சிங்கிள் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாக உள்ளது. சரியாக 6 மணிக்கு தமிழிலும், 7 மணிக்கு தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
விஜய் ஆடிப்பாடியுள்ள ரொமான்டிக் பாடலான இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துபாடியுள்ளார் . காதல் ரசம் சொட்ட உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மனதை மயக்கும் மெட்டுடன் இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை AGS நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.