நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை சக மனுஷியாக மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் அவசியமாகிறது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, கொல்கத்தாவில்கஸ்பா பகுதியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவரை சக பயணி பாலியல் தொல்லைக் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் அலறியடித்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து அந்த நபர் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கி, அவரை கஸ்பா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா