மும்பை நடிகை புகாரில் 3 IPS அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை.? நடந்தது என்ன?
செல்வகுமார் September 21, 2024 02:14 PM

மும்பையைச் சேர்ந்த நடிகை புகார் அளித்ததையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக பல மூத்த காவலர்கள் தண்டிக்கப்பட்ட வழக்கில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

ஆந்திர பிரதேசத்தில் முந்தைய YSR காங்கிரஸ் ஆட்சியில், பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறும்படி மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜேத்வானி, கைது செய்து துன்புறுத்தியதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து நடிகை தெரிவித்ததாவது மும்பையில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் மீது, பாலியல் புகார் அளித்திருக்கிறார். நடிகை அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த புகாரை வாபஸ் பெறும்படி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி  கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் வறுபுறுத்தியதாகவும் ,  மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகையின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆட்சி மாற்றம்:

அவர் அளித்த புகாரின்படி, சொத்து தொடர்பாக ஏமாற்றியதாக கூறி,  கடந்த பிப்ரவரியில் மும்பையில் இருந்து நடிகை கைது செய்யப்பட்டதாகவும், பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் நடிகை தெரிவித்தார்.

இந்நிலையில் , ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஆந்திரப் பிரதேச காவல்துறையில் நடிகை ஆன்லைனில் முறையான புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறை இயக்குநர் துவாரகா திருமலா ராவ் விசாரணையை தொடங்கினார்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்:

இந்நிலையில் விசாரணையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை கோடிட்டுக் காட்டியதைத் தொடர்ந்து பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு, காந்தி ராணா டாடா மற்றும் விஷால் குன்னி ஆகிய ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உளவுத்துறை தலைவர் ஆஞ்சநேயுலு, முன்னாள் என்டிஆர் மாவட்ட போலீஸ் தலைவர் காந்தி ராணா டாடா டாடா மற்றும் முன்னாள் என்டிஆர் மாவட்ட ஊரக டிசிபி விஷால் குன்னி ஆகியோர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.