உஷார் மக்களே... 34 பேர் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி... சென்னையின் பல இடங்களில் பிரியாணி கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Dinamaalai September 21, 2024 01:48 PM

தமிழகத்தில் அசைவ உணவுகளைப் பரிமாறி வரும் உணவகங்களில் பல பொதுமக்களின் உடல்நலத்தை சமயங்களில் உயிரையும் பலி வாங்கி வருகிறது. பணம் சம்பாதிப்பது மட்டுமே பிரதானம் என்கிற ரீதியில் இவை இயங்கி வருகின்றன.

யாரும் செத்தாலோ அல்லது பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டாலோ தான் உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இல்லையெனில் இவற்றின் தரத்தைப் பற்றிக் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. சென்னையில் பல கிளைகளை கொண்டுள்ள எஸ்.எஸ்.பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி எடுத்ததால், கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சமீப காலமாக உணவகங்கள், இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன், பல கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் கடந்த 20 நாட்களுக்கு அடுத்தடுத்து 2 முறை இப்படி ஆயிரக்கணக்கான கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள SS பிரியாணி உணவகத்தில், பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.பிரியாணியின் கொடுங்கையூர் கிளையில் (எம்.ஆர்.நகர் சிப்காட் பகுதியில் உள்ளது) பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இந்த விவகாரம் பொதுமக்களிடையே வேகமாக பரவியதும் பொதுமக்கள் கடை முன்பாக குவிய தொடங்கியதால் பிரச்னை ஏற்பட்டது.

அதன்பின், அங்கு வந்த போலீசார், இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தக் கடையில் விற்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கொடுங்கையூர் எஸ் எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.