தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Seithipunal Tamil October 19, 2024 09:48 PM

இன்று மதியம் ஒரு மணி வரை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில், மதியம் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

இந்திய வானிலை ஆய்வும் மையம் விடுத்துள்ள தகவலின்படி, மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (19 ஆம் தேதி), நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை குறைந்த நிலையில் இடுக்கி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை 33 சதவீதம் குறைந்த போதும் இடுக்கி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.