பண்டிகை நாளில் ஆடுகளை குறிவைக்கும் கும்பல்.. கதறும் விவசாயிகள்.. கண்டுகொள்ளாத காவல்துறை!
Dinamaalai October 26, 2024 01:48 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் சந்தவாசல், படைவீடு, கண்ணமங்கலம், ஆரணி, களம்பூர், செய்யாறு, செங்கம், கடலாடி, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆடு திருடும் கும்பல் அதிகளவில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள்  திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கண்ணமங்கலம், சந்தவாசல், படவீடு பகுதிகளில் அதிகளவில் ஆடுகள் திருடப்படுவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆடு வளர்ப்போர் கூறுகையில், தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது பல கும்பல்கள் ஆடுகளை திருடுகின்றனர். அந்த ஆடுகளை சந்தையிலோ அல்லது இறைச்சிக் கடையிலோ குறைந்த விலைக்கு விற்கிறார்கள். திருவிழா நாளில் ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் வரை (ஆட்டின் எடைக்கு ஏற்ப) விற்கப்படுகிறது. ஆடு வளர்க்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறோம். நமது உடல் உழைப்பும் அதிகம். ஆனால் ஆடுகளை எளிதில் திருடுகிறார்கள். கண்ணமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் தீபாவளி பண்டிகைக்கு 2 ஆடுகளை திருடிய சபரீசனை கிராம மக்கள் 3 நாட்களுக்கு முன்பு பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆடுகள் திருடு போவதாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆடு வளர்ப்பவர்களில் பலர் குறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். ஆடுகளை விற்று கிடைக்கும் வருமானத்தை நம்பி உள்ளனர். பெரும்பாலான மக்கள் அதை ஒரு பக்க வேலையாக செய்வதில்லை. அதைத் தங்கள் முக்கியத் தொழிலாகச் செய்கிறார்கள். எனவே, ஆடு திருடும் கும்பலை போலீசார் பிடித்து கைது செய்து தண்டிக்க வேண்டும்,'' என்கின்றனர்.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.