ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் அக்.29 முதல் 2 தினங்களுக்கு டோல்கேட் கட்டணம் கிடையாது… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
SeithiSolai Tamil October 27, 2024 01:48 PM

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளியை முன்னிட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் இயக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு ஆம்னி பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதனை ஏற்றுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மட்டும் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த புதிய அறிவிப்பு வாகன ஓட்டுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.