விஜய் கொடுத்த துப்பாக்கி.. சிவகார்த்திகேயன் நச் பதில்கள்!
ttncinema October 30, 2024 06:48 AM

கோவையில் அமரன் திரைப்பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அமரன் திரைப்படத்தில் நடித்ததற்கான காரணம் குறித்தும், உடற்பயிற்சி செய்து தயாரானது குறித்தும் பேசினார்.
 குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாணவர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் அமரன் திரைப்படம் குறித்து பதிலளித்தார். அவர் பேசுகையில், “அமரன் படத்தில் ராணுவ உடையை கடைசியாக போடும் போது என்னுடைய நினைவாக அந்த உடையை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். உடையை விட முகுந்த் நேம் பேட்ஜ் எனக்கு ரொம்ப பிடித்தது. ராணுவ உடை அணிந்த பிறகு எனக்குள் சிறிய மாற்றங்கள் வந்துள்ளது.

காமெடி, கலாய்ப்பது என்பது என் பிறப்பிலேயே வந்துவிட்டது. படப்பிடிப்பு சீரியசாக இருக்கும், நான் கொஞ்சம் தான் ஜாலியாக இருப்பேன்” என்றார். அமரன் படத்திற்கு தயாரானது குறித்து பேசுகையில், "இந்த படத்தில் நடிக்கும் முன்னர் முதலில் மன ரீதியாக நான் தயாரானேன். பின்னர் தான் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான், இந்தப் படத்தில் நடிக்க சரியாக இருக்க முடியும். ஜிம்மில் மிகவும் அதிகமான எடை தூக்கக்கூடிய ஆள் நான் கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கு கொஞ்சம் அதிகம் தூக்கிய காரணத்தினால் தான் கொஞ்சம் உடலில் கட்டி கட்டியாக உள்ளது" என்றார்.

சிவகார்த்திகேயன் அமரன் படப்பிடிப்பு குறித்து பேசுகையில், “முகுந்த் எங்கு வேலை பார்த்தார் என பார்த்து, அங்கு தான் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. இப்படம் நடிக்கத் தொடங்கிய போது முதல் நாளே நான் ஹீரோவான உணர்வு ஏற்பட்டது. விஜய் டிவியில் இருக்கும் போது சாய் பல்லவியைத் தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று கூறியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை” என்றார்.

மேலும் பேசுகையில், "முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாகத் தான் தெரியும். ஆனால் இதைப் பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம்" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயனிடம், விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் (சிவகார்த்திகேயன்) அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, "சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் நிறைய உள்ளது, அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்" என்றார்.

மாணவர்கள் நிகழ்ச்சியின் போது உங்களைப் பார்த்து துப்பாக்கி போல் ஆக்ஷன் காட்டியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதற்காக தான் கைகளை உயர்த்தி, மாணவர்கள் என்னிடம் காண்பித்தார்கள்" என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.