ஆண்களுக்கான உரிமைகளை எடுத்துரைக்கும் ஆர்வலர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுடன் பேசிய உரையாடலை ஸ்கிரீன்ஷாட் ஆக பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். ஆர்வலர் பகிர்ந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டில் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்கிறார்.
அப்போது அந்த ஆர்வலர் அந்தப் பெண் கேட்டது போன்று நவம்பர் மாதத்தின் மத்தியில் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்புக்கொண்டதோடு தனது மேட்ரிமோனி சுயவிபரத்தில் டைப்பிங்கில் தவறு ஏற்பட்டு மூன்று லட்சம் வருட சம்பளத்திற்கு பதிலாக 30 லட்சம் என்று தவறாகிவிட்டது என்று கூறுகிறார்.
இதை பார்த்த அந்த பெண் ஆர்வலரிடம் கடுமையாக பேச துவங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் தாயும் ஆர்வலரை ஏமாற்று வேலை செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றும் மிரட்டத் துவங்கியுள்ளார். அதன் பிறகு அந்த ஆர்வலர் நான் உங்கள் மகளுடன் வேடிக்கையாக தான் கூறினேன்.
மற்றபடி எனது சம்பளம் 30 லட்சம் தான் என்று குறிப்பிட்டு தான் ஒரு வழக்கறிஞர் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணை வறுத்தெடுத்து வருகின்றனர்.
https://x.com/KishwarSiff/status/1850039377365438761
https://x.com/KishwarSiff/status/1850133017341345940