ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சித்ரா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் சித்ராவுக்கு பாலாஜி(41) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு சித்ரா குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி உள்ளார். அதே சமயம் சித்ரா அடுப்புக்கு அருகே இருந்ததால் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். இருப்பினும் பெட்ரோல் ஊற்றி அந்த நபரை அணைத்து கொண்டு கதறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்த பிறகு தான் முகமூடி அணிந்து வந்த நபர் பாலாஜி என்பது தெரியவந்தது. காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.