ஜீ தமிழ் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல், 'வள்ளியின் வேலன்'. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் ஜோடியாக அறிமுகமாகி, பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் இணைந்த சித்து ஸ்ரேயா இருவரும் திருமணத்துக்குப் பிறகு இணைந்து நடித்த இந்த சீரியலில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்து வந்தார் நடிகர் சாக்ஷி சிவா.
சாக்ஷி சிவாஇந்நிலையில் தற்போது சாக்ஷி சிவா இந்தத் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்குப் பதில் 'செல்லமே' முதலான தொடர்களில் நடித்த 'ஆடிட்டர் ஶ்ரீதர்' கமிட் ஆகியிருக்கிறார்.
இந்த 'இவருக்குப் பதில் இவர்' மாற்றம் குறித்து சேனல் தொடர்புடைய ஏரியாவில் விசாரித்தோம்.
''சீரியல் தொடங்கி சில மாதங்கள் தான் ஆகுது. ஆரம்பத்துல இருந்தே அவருக்கு தயாரிப்பு மற்றும் சேனல் தரப்புடன் ஏதோ பிரச்னை போயிட்டுதான் இருந்தது. அதோட விளைவுகள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கூட எதிரொலிச்சு, சில நேரங்கள்ல ஷூட்டிங்கெல்லாம் கூட பாதிக்கப் பட்டிருக்கு. இந்தச் சண்டையால சக ஆர்ட்டிஸ்டுகள் கூட சிரமங்களைச் சந்திச்சதெல்லாம் நடந்தது.
நாங்களும் பிரச்னையைப் பேசி சரி செஞ்சிடுவாங்கனு நினைச்சோம். ஆனா அது நாளுக்கு நாள் அதிகமாச்சே தவிர தீர்கிற மாதிரி தெரியலை. கடைசியில் இப்ப தொடரிலிருந்து சாக்ஷி சிவா வெளியேறியிருக்கார்'' என்கின்றனர் உள் விபரங்கள் தெரிந்த சக ஆர்ட்டிஸ்டுகள் சிலர்.
சாக்ஷி சிவாவைத் தொடர்பு கொண்ட போது அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது.
அவருடைய நட்பு வட்டாரத்தில் சிலரிடம் பேசிய போது,
'இவர் நடிக்கிற எல்லா சீரியல்கள்லயும் குறிப்பிட்ட ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டைதான் தனக்காக டப்பிங் பேச அனுமதிப்பார் இவர். சமயங்கள்ல அதுக்காக இவர் தரப்புல இருந்து சில விஷயங்களை விட்டுக்குக் கொடுக்கவும் தயரா இருப்பார். 'அந்த வாய்ஸ்தான் தனக்கு சரியா இருக்கும்னு உறுதியா நம்புறார். இந்த சீரியல்ல கமிட் ஆனப்பவும், அந்த ஆர்ட்டிஸ்ட்டையே டப்பிங் பேச அனுமதிக்கணும்னு கேட்டிருக்கார். சேனல் தரபிலும் இதுக்கு சம்மதம் சொல்லியிருக்காங்க.
சித்து - ஸ்ரேயாஇப்ப இந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விஷயத்துலதான் இவருக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் பிரச்னை வந்திருக்குது. இவருக்கு டப்பிங் தர்ற ஆர்ட்டிஸ்டுக்குப் பேசின சம்பளம் கிடைக்கலைனு இவர் தரப்புல அதிருப்தி யடைஞ்சதாச் சொல்றாங்க.
ஆனா பட்ஜெட்டைக் காரணம் காட்டி ஒரு கட்டத்துல அந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையே மாத்தியிருக்காங்க தயாரிப்புத் தரப்பு. இந்த சண்டை முற்றியதுல இவரும் வெளியேறுகிற முடிவுக்கு வர, தயாரிப்புத் தரப்புமே இவருக்குப் பதில் வேற ஆர்ட்டிஸ்ட்டைத் தேட முடிவு செய்திருக்காங்க.
கடைசியில ஆடிட்டர் ஶ்ரீதர் சிவா இடத்துக்குக் கமிட் ஆக அவரை வச்சு இப்ப ஷூட்டிங் போயிட்டிருக்கு'' என்றார்கள் அவர்கள்.
தயாரிப்புத் தரப்பில் விசாரித்த போது, 'அவர் ஒருவரால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு தேவையில்லாம மத்த ஆர்ட்டிஸ்டுகள் பாதிக்க்ப் பட்டாங்க. இப்ப நடந்த மாற்றத்துக்குக் கூட அவர்தான் காரணம்' என முடித்துக் கொண்டார்கள்
இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளிவரும் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...