நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தபால் வாக்குகளை என்னும் பணி தொடங்கி விட்டது.
இந்நிலையில் தற்போது வரை ஆளுங்கட்சியான NPP கட்சி 60% வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமாக 225 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையைப் பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.