சென்னை மாவட்டத்தில் பிராமணர்கள் தங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்க கோரியும், தங்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசிய விவகாரம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் பிராமணர்களுக்காக ஆதரவாக தெலுங்கு மக்களை அந்தபுரத்தில் வேலை செய்தவர்கள் என இழிவாக பேசியது குறித்து மதுரை திருநகர் காவல் நிலையத்தில் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். இதன் பின்னர் நடிகை கஸ்தூரி இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தமிழ், தெலுங்கு மக்களிடையே வன்முறையை தூண்டுவதாக நடிகை கஸ்தூரி பேசியதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என ஜாமினை தள்ளுபடி செய்தார். இதை அடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்தார் இவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவரின் உதவியால் ஆந்திர மாநிலத்தில் கஸ்தூரி தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறையினர் நடிகையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.