35,000 அடி உயரத்தில் ஷேக் ஆன விமானம்.. தூக்கி வீசப்பட்ட பயணிகள்!
Dinamaalai November 17, 2024 01:48 AM

ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் SAS SK957 ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் அமெரிக்காவில் உள்ள மியாமிக்கு புறப்பட்டது. இந்நிலையில் வானில் சென்று கொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கடும் கொந்தளிப்பை சந்தித்தது. அப்போது விமானம் சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.


கொந்தளிப்பு காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் இருக்கையில் இருந்து மேல்நோக்கி தூக்கி வீசப்பட்டனர். பல மணி நேரம் கொந்தளிப்பு நீடித்ததால் விமானம் தொடர முடியாமல் ஐரோப்பா திரும்பியது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஒருவர் காயமடைந்ததாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.