இதுக்கு தான் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டையில மூக்கை நுழைக்கக் கூடாது… கடைசில உயிரே போயிடுச்சு…!!!
SeithiSolai Tamil November 17, 2024 03:48 AM

தலைநகரான புது டெல்லியில் வடக்குடெல்லி பகுதியில் தீரஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி ஒருவர் இருந்துள்ளார். தீரஜ் தனது மனைவியிடம் மிகவும் கொடூரமான முறையில் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. இதில் அவர் மனைவியை உடல் ரீதியாகவும் பலமுறை துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று தீரஜ் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் ரன்சிங், தீரஜை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும், தீரஜின் தவறான பழக்கத்தை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களது சண்டையில் இடையில் வந்த ரன்சிங்கை தீரஜ் கோபத்தில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் வேகமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ரன்சிங் மயங்கி சரிந்துள்ளார். இதை அடுத்து ரன் சிங்கின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரன் சிங் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரன் சிங்கின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் தீரஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.