சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. தமிழ்த்திரை உலகில் சமீபத்தில் அதிகமாக ஓடியது இந்தப் படம் தான். 804 நாள்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
இந்தப் படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக வந்து அருமையாக நடித்து இருந்தார். ரஜினி வேட்டையனாக வந்து அவரை சாந்தப்படுத்துவார். பிரபுவும் இணைந்து நடித்து அசத்தி இருப்பார். வடிவேலுவின் காமெடி அசத்தலாக இருக்கும்.
எங்கு உள்ளது?
Also read:
சந்திரமுகி படத்தில் வரும் அரண்மனை எங்கு உள்ளது தெரியுமா? கர்நாடகாவில் தான். இங்கு 2 அரண்மனைகள் ரொம்பவே பிரபலம். ஒன்று மைசூர் பேலஸ். இன்னொன்று பெங்களூரு பேலஸ். இதுல சந்திரமுகி அரண்மனை எதுன்னா பெங்களூரு பேலஸ் தான்.
ரூ.1.5 லட்சம்
கன்டோன்மண்ட் ரயில் நிலையத்தின் அருகில் தான் உள்ளது. இந்த அரண்மனையில் தான் பல அறைகளை வாடகைக்கு எடுத்து சந்திரமுகியின் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள். ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.1.5 லட்சமாம்.
சந்திரமுகியின் அறை
இந்தப் படத்தில் நடிகை மாளவிகா படிக்கட்டுகளில் ஓடிவந்து மயங்கி விழும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பல மந்திரக் கயிறுகள் கட்டப்பட்டு பெரிய பூட்டு போடப்பட்ட சந்திரமுகியின் அறைக்கதவு படக்குழுவினரால் அமைக்கப்பட்ட செட். அது உண்மையான அறையின் கதவுக்கு முன்னால் பொருத்தினார்களாம்.
ஜோதிகா ஜன்னல் வழியாக நடனக் கலைஞரான வினீத் வீட்டைப் பார்க்கும் காட்சி எல்லாம் இங்கே தான் படமானது. அதில் காட்டப்படும் வினீத்தின் வீடு தான் அரண்மனைக்கு வரும் ஆபீசர்கள் ஓய்வெடுக்கும் விருந்தினர் மாளிகை.
ரவிவர்மா ஓவியங்கள்
பல இந்திப் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. 1887ல் கட்டப்பட்டதாம். மைசூர் ராஜ வம்சத்துக்குச் சொந்தமானது. இங்குள்ள தர்பார் அறையில் புகழ்பெற்ற ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் உள்ளன.
chandramuki palace
இந்தியர்கள் சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் 225 ரூபாய். வெளிநாட்டவர் என்றால் 450 ரூபாய். திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் திருமணத்துக்கும் இந்த அறை வாடகைக்கு விடப்படுகிறதாம். 120 ஆண்டுகள் பழமையானது இந்த அரண்மனை. இதன் பரப்பளவு 430 ஏக்கர்.
Also read:
2005ல் உருவான சந்திரமுகி படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சக்கை போடு போட்டன. நயன்தாராவின் நடிப்பும் பேசப்பட்டது.