இன்று தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள். இன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பக்தர்களின் அவசரகால உதவிக்காக சபரிமலையில் இலவச Wifi சேவை தொடங்கப்பட்டுள்ளது. BSNL நிறுவனம் தான் இந்த சேவையை வழங்கியுள்ளது. சபரிமலை வழித்தடத்தில் புதிதாக நான்கு 4G டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இடங்களில் Wifi Hotspot-கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.