குதிகால் வலியை போக்க : ஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்து...
Newstm Tamil December 04, 2024 12:48 PM

குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் சிலவற்றை காண்போம்:

• குதிகால் வலிப் பிரச்சினையில் முதன்மையானது உடல் பருமன் அதிகரிப்பது.

• காலணிகளை காலுக்கு தகுந்தவாறு அணியாமல், பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிகால் வலி உண்டாகும்.

• ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி வரலாம்.

• அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய் வதாலும் குதிகால் வலி ஏற்படும். இதனை ‘பிளான் டார்ஃபேசியைட்டிஸ்’ எனக் குறிப்பிடுவார்கள்.

குதிகால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவகுறிப்புகள்:

• ஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதை பருத்தித் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிகால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

• நொச்சி இலையின் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிகாலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிகால் வலி நீங்கும்.

• உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால் எடையைக் குறைக்கலாம். இதனால் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

• திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பருகுவதன் மூலமாகவும் குதிகால் வலி கட்டுப்படும்.

• வில்வக்காயை நெருப்பில் சுட்டு, அதைக்கொண்டு குதிகாலில் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

• பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.