வெளியான தகவல்..! பிரெஞ்சு பிரைஸ் தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தத்தை அதிகரிக்குமாம்..!
Newstm Tamil December 04, 2024 12:48 PM

ஃபிரெஞ்சு ஃப்ரைஸ் எனப்படும் பொறித்த உருளைக்கிழங்கை உண்பது மனிதர்களின் கவலை எண்ணத்தை 12%ம், மனச் சோர்வை 7%ம் அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சினாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், பிரெஞ்சு பிரைஸ் அல்லது பொறித்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதால், நமது மன அழுத்தம்  இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோல பொறித்த உணவுகள், அதாவது பிரெஞ்சு பிரைஸை சாப்பிடும் நபர்களுக்கு, 12 % பேருக்கு  பதற்றம் மற்றும் இது தொடர்பான சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 7 % மன அழுத்தம் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆய்வு அப்படி கூறினாலும், பொறித்த மட்டும் அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் உங்களுக்கு ஒரு மன நிறைவை தருவதால், இது ஒருவகை அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உணவு கண்டிப்பான தேவையாக மாறும்போது இது அழுத்தமாக மாறுவதாக கூறப்படுகிறது.

நிச்சயமாக பொறித்த உணவுகள், உடல் எடையை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தம், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்நிலையில் பொறித்த உணவுகளை தொடர்ந்து பல வருடங்கள் அதிகமாக சாப்பிடுவதால், மன அழுத்தம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.  

இதுபற்றி தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உருளைக்கிழங்குடன் சார்ந்த உணவுகளை எண்ணெயில் பொறிக்கும்பொழுது அக்ரிலமைட் ’acrylamide’ என்ற ஒரு பொருள் உருவாவதாகவும், இதுவே பாதிப்புகளுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து ’அக்ரிலமைட்’ மனிதர்களால் உட்கொள்ளப்படும்போது மனச்சோர்வு மற்றும் கவலை ஆகிய பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டாவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அதிக அளவு அக்ரிலமைட் உட்கொள்வது விலங்குகளுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது. ஆயினும் மனிதர்களில் ஏற்படுத்தும் அதீத தாக்கம் குறித்து இன்னும் ஆய்வுகளின் மூலம் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆய்வில், பொறித்த உருளைக்கிழங்கை உண்பவர்கள், பொறித்த இறைச்சியை உண்பவர்களை விட 2% அதிக மனஅழுத்தத்தில் ஆட்படுகின்றனராம். மொத்தம் 12,735 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 8,294 பேர் இளைஞர்கள் என்பதும், இளைஞர்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

ஆய்வின் வெளிப்பாடாக அதிக அளவு வறுத்த அல்லது பொறித்த உணவுகளை மனிதர்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.