இது தெரியுமா ? அடிக்கடி கட்லா மீன் சாப்பிட்டு வந்தால்...
Newstm Tamil December 08, 2024 10:48 AM

கட்லா மீனை அடிக்கடி உட்கொண்டு வந்தால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். கீழே கட்லா மீனை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.

1. இதய ஆரோக்கியம் மேம்படும்

கட்லா மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைப் பராமரிக்க உதவி புரிந்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
 

2. மூளை நன்கு செயல்படும்

கட்லா மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை. முக்கியமாக இது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன. மேலும் இது வயதான காலத்தில் சந்திக்கும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்க உதவி புரியும்.

3. எடையைப் பராரிக்க உதவும்

கட்லா மீனில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. இது பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதோடு,நீண்ட நேலம் பசி எடுக்காமலும் தடுக்கும். மேலும் இது தசைகளின் வளர்ச்சிக்கும், உடல் திசுக்களில் உள்ள காயங்களை சரிசெய்யவும் உதவுகிறது.

4. நோயெதிர்ப்பு அதிகரிக்கும்

கட்லா மீனில் செலினியம் வளமான அளவில் உள்ளன. இந்த செலினியம் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பளிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

5. தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது

கட்லா மீனில் உள்ள அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடியைப் பெற உதவி புரிகிறது. அதுவும் இந்த சத்துக்களானது சருமம் மற்றும் முடியில் ஈரப்பதத்தைப் பராமரித்து, வறட்சித் தடுத்து, இளமையான தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆகவே நீண்ட காலம் இளமையாக இருக்க விரும்பினால், கட்லா மீனை சாப்பிடுங்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.