இது தெரியுமா ? அடிக்கடி ஆட்டு தலைக்கறி சாப்பிட்டு வந்தால்...
Newstm Tamil December 08, 2024 10:48 AM

ஆடு தலைக்கறி பெரும்பாலானோரால் விரும்பப்படுவது இல்லை. ஏனென்றால் அதனை சமைக்கும் பக்குவம் என்பது சிரமமானது. ஆனால், அதனுள் பல நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. 

ஆட்டின் தலைக்கறியில் பல சத்துக்கள் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது வாரம் ஒருமுறை ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கும் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஆட்டுத் தலைக்கறியில் CLA என்னும் இணைந்த லினோலிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, உடலினுள் ஏற்படும் பல அழற்சிகளைத் தடுக்கும். ஆகவே புற்றுநோய் வரக்கூடாதெனில், ஆட்டு தலைக்கறியை அவ்வப்போது சமைத்து சாப்பிடுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கர்ப்பிணிகள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், எவ்வித குறையும் இல்லாமல் பிறக்கும்.

 

ஆட்டின் தலைக்கறியை சமைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை ஆட்டு தலைக்கறியை சமைத்து சாப்பிடுங்கள்.

ஆட்டு தலைக்கறியில் அதிகளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் லீன் புரோட்டீன்கள் உள்ளன. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், ஆட்டு தலைக்கறியை அடிக்கடி சமைத்து சாப்பிடும் போது, இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை தடுக்கப்படும்.

கூடுதலாக, ஆட்டுத் தலைக்கறியை வாரம் ஒருமுறையாவது உட்கொண்டு வந்தால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். மேலும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக சிறுநீரக நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும். எனவே இதுவரை நீங்கள் ஆட்டு தலைக்கறியை சாப்பிடாமல் இருந்தால், இனிமேல் சாப்பிட்டு, அதன் பலனைப் பெறுங்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.