மட்டனைக் கொண்டு சோம்பேறி மட்டன் வறுவலை செய்யுங்கள். இந்த சோம்பேறி மட்டன் வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ரசம் சாதம், வெள்ளை சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: * மட்டன் - 1/2 கிலோ * பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) * பெரிய தக்காளி - 1 (நறுக்கியது) * பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) * இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது) * பூண்டு - 4 பல் (நறுக்கியது) * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் * எண்ணெய் - தேவையான அளவு * உப்பு - சுவைக்கேற்ப * கறிவேப்பிலை - சிறிது * கொத்தமல்லி - சிறிது
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், அதற்கேற்ப தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, ட்ரையாக வேண்டுமானால், மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, நீர் வற்றும் வரை வேக வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சோம்பேறி மட்டன் வறுவல் தயார்.
Read more at: