இது தெரியுமா ? வெறும் வெங்காயத் தோல் உங்க ஆரோக்கியத்திற்கு இத்தனை நன்மைகள் வழங்குகின்றன..!
Newstm Tamil December 10, 2024 01:48 PM

வெங்காயத் தோலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த வெங்காயத் தோலின் வெளிப்புற அடுக்குகளில் ஃபிளவனாய்டுகள், குவெர்செடின் போன்ற தாவர கலவைகள் காணப்படுகிறது. இதில வைட்டமின் ஈ, பிபி, வைட்டமின் சி, கரோட்டீன்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

இதிலுள்ள குர்செடின் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை இதில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எல். டி. எல் போன்ற கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. ஒவ்வாமையை எதிர்த்து போராட உதவுகிறது. மனச்சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது.

சமையலுக்கு பயன்படும் வெங்காயத் தோல் வெங்காயத் தோலை நீங்கள் தயாரிக்கும் சூப்பில் போட்டு பயன்படுத்தி வரலாம். வெங்காயத் தோலை சூப்பில் போடும் போது அதில் உள்ள சத்துக்கள் சூப்பில் இறங்க வாய்ப்பு உள்ளது.

வெங்காயத் தோலை ஒரு சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

வெங்காயத் தோலை 20 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி தினமும் படுக்க போவதற்கு முன்பு இதை டீயாக குடித்து வாருங்கள். ஒரு வாரத்தில் உங்கள் கால் பிடிப்புகள் குறைந்து போய் இருக்கும்.

செய்முறை

2-3 வெங்காயத் தோலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு குறைந்த தீயில் 20 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். பிறகு அந்த சாற்றை வடிகட்டி கொள்ளுங்கள். அதில் சிவப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கரைசலை தலையின் வேர்க்கால்களில் படும் படி தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என திரும்ப திரும்ப செய்து வாருங்கள். உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படுவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

 

வெங்காயத் தோல் உங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இந்த சிகிச்சையை உங்களுக்கு மாதவிடாய் வந்த பின் 10 நாட்களுக்கு பிறகு தொடங்க வேண்டும். 300 மி. லி அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் கொஞ்சம் வெங்காயத் தோலை சேர்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதனுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 முறை என ஒரு வாரத்திற்கு குடித்து வர வேண்டும்.

 

இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால் அதற்கு இந்த வெங்காயத் தோல் டீ உங்களுக்கு உதவி செய்யும். வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். 15 நிமிடங்கள் ஊற விடுங்கள். பிறகு அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள். நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொசுக்கள் மற்றும் ஈக்கள் வரும் ஜன்னல் பகுதிகளில் வைத்து விடுங்கள். வெங்காயத் தோலின் பூஞ்சை வாசனை காரணமாக கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்றவை பக்கத்தில் வராது.

பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்க உதவுகிறது

ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்து அதில் பாதியளவுக்கு வெங்காயத் தோலை போட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு மூடி போட்டு மூடி விடுங்கள். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரால் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி வரும் போது பொடுகுத் தொல்லை நீங்க வழி வகுக்கிறது. வெரிகோஸ் வீனுக்கு சிகிச்சை அளிக்கிறது : அறிவியல் பூர்வமாக வெங்காயத் தோல் வெரிகோஸ் வீனுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. 100 மி. லி வோட்கா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நசுக்கிய வெங்காயத் தோலை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை நன்றாக ஊற விடுங்கள். இந்த கலவை ஒரு நல்ல டின்சராக செயல்படுகிறது. இதிலிருந்து 20 சொட்டுகளை நீங்கள் டானிக்காக எடுத்துக் கொண்டு வரலாம். ஒரு நாளைக்கு 2-3 முறை என 10 நாட்களுக்கு எடுத்துக் கொண்டு வாருங்கள்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.