சமூக வலை தளங்களைப் பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை குன்றத்தூர் பகுதியில் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து,1000-க்கும் மேற்பட்டோர் அடங்கிய வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதன் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. அண்மையில் புதுக்கோட்டையை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, குழந்தை உயிரிழந்தது.
இதில் 'யூடியூப்' பார்த்து மாமியாரும், கணவரும் பிரசவம் பார்த்துள்ளனா். இதுபோன்று, சமூக ஊடகங்களைப் பார்த்து வீட்டிலேயே சிகிச்சை பெறுதல், பிரசவம் பார்த்தல் ஆகியவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவை பெரிய ஆபத்தாக முடியும் என, பொதுசுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வி நாயகம் கூறுகையில்," தமிழக அரசு பிரசவ கால உயிரிழப்பைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப சுகதார நிலையங்களில் அறுவை சிகிச்சை இல்லாத பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. எனவே, வீடுகளிலேயே பிரசவம் பார்க்க நினைப் போர், அந்த நிலையில் இருந்து மாற வேண்டும். இயற்கை பிரவசம் வேறு. வீட்டு பிரசவம் வேறு. இதை அனைவரும் புரித்துகொள்ள வேண்டும்.
வீடுகளிலேயே பிரவசம் பார்க்கும்போது ஏற்படும் சிக்கலான நிலையைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தாய் அல்லது குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எவ்வித பிரச்சினையும் இல்லாத கர்ப்பிணி யாருக்கும் எந்நேரங்களிலும் சிக்கள் ஏற்படலாம். முக்கியமாக பிரசவத்தின்போது தாய்க்கு அதிகரத்துப்போக்கு தோய் தொற்று. குழத்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்களில் திடீரென ஏற்படும் ஆபத்து நேரத்தில் இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். வீட்டில் ஏற்படும் பிரசவத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூகவலைதளங்களைப் பார்த்து பிரசவம் பார்க்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்" என அவர் கூறினார்.